ஆசிரியர்கள் நியமனத்தில் கிழக்கு புறக்கணிப்பு!

தொண்டர் ஆசிரியர்கள் நியமனத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுவதாக கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், வடக்கில் தொண்டர் ஆசியரியர்களுக்கு இருமுறை நியமனம் வழங்கப்பட்டது.

ஆனால், கிழக்கிலுள்ள தொண்டர் ஆசிரியர்கள் 779 பேருக்கான நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்ட போதிலும் இதுவரையில் நியமனம் வழங்கப்படவில்லை.

அவர்கள் சுமார் 15 வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிகின்றனர். அவர்களுக்கு விரைவில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வெண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.