இலங்கையில் தொலைபேசிகள் மூலம் பரவும் அபாய பொருள்!

கம்பஹாவில் eZ Cash தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போதைப்பொருள் கொள்வனவு செய்யும் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

eZ Cash மூலம் கைடயக்க தொலைபேசிக்கு பணம் அனுப்பி விட்டு ஹெரோயின் கொள்வனவு செய்த இளைஞர்கள் பியகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் 80, 120 மற்றும் 160 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பியகம புலனாய்வு பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் செய்யும் இந்த இளைஞர்கள் கெக்கிராவ, வெல்லவ மற்றும் பியகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் போதைப்பொருள் ஆபத்தான பொருளாக ஜனாதிபதியினால் பிரடகனம் செய்யப்பட்டுள்ளதுடன், அதனை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.