தமிழிசைக்கு ராகுல்காந்தியை விமர்சிக்கத் தகுதி இல்லை!

தமிழிசைக்கு ராகுல்காந்தியை விமர்சிக்கத் தகுதி இல்லை!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை விமர்சிக்க தமிழிசைக்கு தகுதி இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஒத்துழைப்புடன், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைந்தது முதல் பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிடையே மிகப்பெரிய கலக்கத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பா.ஜ.க.வினர் இக்கூட்டணியைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் புலம்பிக்கொண்டு அலைகின்றனர்.

எமது கூட்டணியைக் குறித்து விமர்சனம் செய்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றார்” என கே.எஸ்.அழகிரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.