இலங்கை மீது சர்வதேசம் கடும்போக்கை கையாள்வதற்கு மஹிந்தவே காரணம்!

இலங்கை மீது சர்வதேசம் கடும்போக்கை கையாள்வதற்கு மஹிந்தவே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கையில் சர்வதேசத்தின் தலையீட்டை உறுதிபடுத்திய மஹிந்த ராஜபக்ஷ, அதனை விலக்கிக் கொள்ளுமாறு கோருவது எவ்வகையில் என அக்கட்சி எழுப்பியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாடுகள் இலங்கையின் உள்ளக பிரச்சினைகளில் தலையீடு செய்ய அனுமதிக்க வேண்டாம் என மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். ஆனால் இவ்வாறு சர்வதேசம் தலையீடு செய்வதற்கு யார் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது?

அவரின் ஆட்சி காலத்தில் சர்வதேச நாடுகளுக்கு செவி கொடுக்காமல் மிகவும் கடுமையான போக்கை கடைபிடித்தனர். அவ்வாறான நடவடிக்கைகள் காரணமாகவே இன்று சர்வதேசத்தின் தலையீடு அதிகரித்துள்ளது.

ஆனால் நல்லாட்சி அரசாங்கம் மிக ஒழுக்கமான உறவை சர்வதேச நாடுகளுடனும். மனித உரிமைகள் பேரவையுடன் பேணியது. அதன் மூலமே இலக்கைக்கு எதிரான கரும் புள்ளிகள் அனைத்தும் இல்லாது செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.