யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமானது மாபெரும் பேரணி.

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தும் யாழில் இருந்து மாபெரும் பேரணி ஆரம்பமாகியுள்ளது.

இந்த பேரணியானது யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் ஏற்பட்டில் பல்கலைக்கழக முன்றலில் இருந்து சற்று முன் ஆரம்பித்துள்ளது.

குறித்த பேரணியானது பலாலி ஊடாக குச்சவெளியை அடையவுள்ளதுடன், அங்கு மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக மட்ட அமைப்புகள் மற்றும் மக்களும் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.