நிழல் பிரதமரானார் எம்.ஏ.சுமந்திரன்!

நிழல் பிரதமரானார் எம்.ஏ.சுமந்திரன்!

நிழல் பிரதமர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பௌத்தத்திற்கான முன்னுரிமையை மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எம்.ஏ.சுமந்திரனிடம் இருந்து பௌத்தத்தை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“அரசியல் அமைப்பில் 9ஆம் உறுப்புரிமை ஒருபோதும் மாற்றப்படாது என மகாநாயக தேரர்கள் முன்னிலையில் கூறியிருக்கின்ற நிலையில், இன்று அரசியல் அமைப்பினை மாற்றும் நிலைமை உருவாகியுள்ளது.

புத்தசாசன அமைச்சருக்கோ அல்லது பிரதமருக்கோ அரசியல் அமைப்பில் பௌத்தத்திற்கான முன்னுரிமையை மாற்றியமைக்க அவசியம் இல்லை. எனினும், நிழல் பிரதமர் சுமந்திரனுக்கு அந்த தேவை இருக்கின்றது.

ஆகையினால், சுமந்திரனிடம் இருந்து பௌத்தத்தை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே அரசியல் அமைப்பின் 9ஆம் உறுப்புரிமையை மாற்றக்கூடாது.

இதேவேளை, விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என கூறிய விஜயகலா மகேஸ்வரன் இன்று அரசாங்கத்தில் அமைச்சு பதவியில் இருக்கின்றார்.

எனினும், நாட்டில் பௌத்த வாதம் பேசிய ஞானசார தேரர் இன்றும் சிறையில் உள்ளார். இந்நிலையில், ஞானசார தேரருக்கு செயற்பட்ட சட்டம் ஏன் விஜயகலா விடயத்தில் செயற்படவில்லை” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.