‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கவுள்ள பிரபலம்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இயக்குநர் மணிரத்தினத்தின் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சிம்பு ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலின் கதாநாயகனான வந்தியத்தேவனின் பாத்திரத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இந்த பாத்திரத்தில் வீரம், காதல், நகைச்சுவை மற்றும் தந்திரம் ஆகியவற்றுடன் அமரர் கல்கி உருவாக்கியிருப்பார். இந்த பாத்திரத்தை எந்த அளவுக்கு கார்த்தியை பொருந்த வைக்க மணிரத்னம் முயற்சிக்கின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதேவேளை, முதன்மை பாத்திரமான பொன்னியின் செல்வன் என்ற ராஜராஜ சோழன் பாத்திரத்தில் நடிப்பது யார் என்பது குறித்த தகவலும் விரைவில் வெளிவரவுள்ளது.