கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் வைத்தியசாலையில்!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் வைத்தியசாலையில்!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் இரு சாரருக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பின்போது கூரிய ஆயுதத்தால் தக்கப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயத்துக்குள்ளானவர் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாஞ்சோலை பிரதேசத்தினை சேர்ந்த நயிமுன் சாகுல்ஹமீட் வயது (56) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த நபர் இந்திய நாட்டுபிரஜை என்றும் மாஞ்சோலை பிரதேசத்தில் திருமணம் புரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் மேற்கொண்ட நபரை வாழைச்சேனை பொலிசார் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.