மன்னாரில் புகைப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆபத்தான போதைப்பொருள்!

மன்னாரில் புதைககப்பட்ட நிலையில் ஒரு தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹஷீஸ் என்ற போதைப்பொருள் தொகையே கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் சுற்றுலா பயணிகள் தங்கும் இடத்திற்கு அருகிலேயே இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப் பகுதியிலிருந்து ஒரு கிலோ போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை.

மீட்கப்பட்ட போதைப்பொருள் சட்ட நடவடிக்கைகளுக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.