கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்கான தனியார் பேருந்து சேவை பகிஸ்கரிப்பு இன்று ஆரம்பம்.

கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்கான தனியார் பேருந்து சேவை பகிஸ்கரிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டது. வவுனியா பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட முறண்பாட்டினை அடுத்து இன்று முதல் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கிளிநொச்சி தனியார் போக்குவரத்து சங்க தலைவர் நகுலன் தெரிவிக்கின்றார்.

ஏனைய மாவட்டங்களை போன்று குறுந்தூர சேவை அடிப்படையில் சேவைகளை முன்னெடுக்கும் வகையில் சேவைகளை அங்கிருந்து முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பில் வவுனியா நீதிமன்ற உத்தரவை மீறி செயற்படுவதாகவும் தெரிவித்தே குறித்த பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

வவுனியா தனியார் போக்குவரத்து சங்கத்தினர் குறித்த விடயம் தொடர்பில் ஐந்து நாட்களிற்குள் தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளதாகவும், அதுவரை குறித்த பகுதிக்கான சேவையை மேற்கொள்ள கிளிநொச்சி மாவட்ட தனியார் போக்குவரத்து பேருந்து உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.