97 பேருக்கு வீட்டுத்திட்டம் அமைக்க ஏற்பாடு.

97 பேருக்கு வீட்டுத்திட்டம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 97 பயனாளிகளிற்கான வீட்டுத்திட்டம் அமைத்தல் தொடர்பான ஆலோசனை ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலாளர் ரமேஸ் தலமையில் இடம்பெற்றது.

மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் 995000 ரூபா பெறுமதியான வீட்டு திட்டங்கள் வழங்கப்படவுள்ளது.

இதற்கான முதல்கட்ட பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக உதவி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

வீடு அமைப்பதற்கான மணலை பெற்றுக்கொள்வதற்காக ஏப்ரல் முதலாம் திகதி அனுமதிப்பத்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.