கிளிநொச்சி மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இன்று காலை முதல் மருந்தகங்கள், உணவகங்கள் தவிர்ந்த அனைத்த வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி சேவை சந்தை தொகுதியும் மூடப்பட்டுள்ளமையால் வர்த்தக நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை.

ஹர்த்தால் காரணமாக மக்கள் நடமாட்டமும் குறைவடைந்துள்ளது.

அரச திணைக்களங்கள், பாடசாலைகள் திறந்துள்ளன. மாணவர் வருகை இன்மையால் பாடசாலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.