912 கிலோ புகையிலையுடன் இருவர் கைது.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் நேற்று இரவு தலைமன்னார் கலங்கரை விளக்கில் இருந்து சுமார் ஐந்து கடல் மைல்கள் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 27 புகையிலை பொதிகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

912 கிலோ 460 கிராம் நிறைகொண்ட 27 புகையிலை பொதிகளே இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இதை டிங்கி படகொன்று மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகப்படுகின்றன.

குறித்த சந்தேகநபர்கள் மன்னார், பேசாலை பகுதியில் வசிக்கும் 32 மற்றும் 38 வயதாவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் புகையிலை பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், சுங்க அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.