ஐந்து நாட்களாக தேடப்பட்டுவந்த மாணவன் சடலமாக மீட்பு!

நாவலபிட்டிய மாபாகந்த தோட்டத்தில், ஐந்து நாட்களாகக் காணாமல் போயிருந்த பாடசாலை மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த மாணவரை காணவில்லை என கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், முறைப்பாட்டிற்கு அமைய மாணவரை தேடிவந்த பொலிஸார், குறித்த மாணவரின் வீட்டிற்கு பின்புறத்தில் அமைந்துள்ள வனப்பகுதியின், கற்குகையிலிருந்து சடலமாக மீட்டுள்ளனர்.

மேலும், 17 வயதுடைய கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய காவிந்த மதுஷான் என்ற மாணவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் , நாவலபிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.