தகுதியில்லாதவர்களுக்கு சமுர்த்தி வழங்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

தகுதியில்லாதவர்களுக்கு சமுர்த்தி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

ஆரம்பக் கைத்தொழில், சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு, விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதம் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீநேசன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“கிழக்கு மாகாணத்தில் சமுர்த்தி நிவாரணம் பெற தகுதி உள்ளவர்கள் பலர் இருக்கின்றனர். என்றாலும் தகுதியில்லாதவர்களுக்கும் அதிகளவில் வழங்கப்பட்டிருகின்றது. இதுதொடர்பாக விடயத்துக்கு பொறுப்பானவர்கள் கவனம் செலுத்தவேண்டும்.

அத்துடன் கிழக்கு மாகணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசும் அமைச்சும் விசேட திட்டங்களை அறிவிப்பதுடன் அவர்களுக்காக இயங்கும் சங்கங்களுக்கும் உதவிகளை வழங்க வேண்டும்.

அத்துடன் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதுடன் பண்ணைகளை அமைக்கவும் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடவும் அவர்களுக்கு உதவ வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.