மனைவியுடன் சண்டையிட்டவர் சடலமாக மீட்பு.

குருநாகல், ஹொரம்பவ காட்டுப்பகுதியில் எரிந்த கெப்பிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலை, குலங்தாவ பகுதியைச் சேர்ந்த வாசிங்ஹே குருகே சந்தான குமார (50) என்பவரது சடலமே (22) நள்ளிரவு மீட்கப்பட்டுள்ளது.

மனைவியுடன் சண்டையிட்டு விட்டு நேற்று மாலை 6.00மணியளவில் வீட்டை விட்டுச் சென்ற இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கராபிட்டி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.