பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 18 பேர் இடமாற்றம்!

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 15 பேர் மற்றும் கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளர் உட்பட 18 அதிகாரிகளே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூன்று கண்காணிப்பாளர்களும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகிறது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.