பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வுகள் இலங்கையில்!

பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வுகள் இலங்கையில்!

பாகிஸ்தானின் 79ஆவது தேசிய தினம் இன்று (சனிக்கிழமை) இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கொண்டாடப்பட்டது.

பாகிஸ்தான் தூதரகமும், இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினரும் இணைந்து கொண்டாடினர்.

பாகிஸ்தான் தூதரகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் பாகிஸ்தான் தேசிய கீதம் ஒலிக்க, தேசிய கொடியை உயர்ஸ்தானிகர் ஏற்றிவைத்தார்.

அதனை தொடர்ந்து பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினால் அனுப்பிவைக்கப்பட்ட விசேட உரை வாசிக்கப்பட்டது.

அதன் பின்னர் தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் கொடி பொறிக்கப்பட்ட கேக்-கினை உயர்ஸ்தானிகர் சிறுவர்களுடன் இணைந்து வெட்டி பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.