கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக்கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தினம்.

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக்கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநாச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

“பெண்களின் குரல்” எனும் தலைப்பில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பெண்கள் எதிர்கொள்ளம் சவால்கள் தொடர்பில் 12 தலைப்புக்களில் கருத்துரைகளும் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பெண்களாக எதிர்கொள்ளம் சவால்கள் தொடர்பிலும் கருத்துரைக்கப்பட்டது.