நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் யாசகம் பெற்ற முன்னாள் போராளி.

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் யாசகம் பெற்றுக்கொண்டிருந்த முன்னாள் போராளிக்கு சிறிய கடையொன்று அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் – வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த குறித்த முன்னாள் போராளிக்கே யாழ். புனித பரியோவான் கல்லூரியின் பழைய மாணவர்கள் இந்த உதவியை செய்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளஙக்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.