யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்.

2017 மற்றும் 2018 ஆம் கல்வியாண்டிற்கு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளிற்கான அறிவுறுத்தல்களை யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் வவுனியா வளாகத்தின் பிரத்தியேக விஞ்ஞான பீடத்தின் மாணவர்களின் திசைமுகப்படுத்தல் நிகழ்வானது 17-04-2019 ஆம் திகதிகளிலும் கல்விச் செயற்பாடுகளின் தொடக்க நிகழ்வானது 22-04-2019 ஆம் திகதிகளிலும் நடைபெறும் என்பதுடன், வணிக பீடத்தின் மாணவர்களின் திசைமுகப்படுத்தல் நிகழ்வானது 25-03-2019 ஆம் திகதிகளிலும் கல்விச் செயற்பாடுகளின் தொடக்க நிகழ்வு 22.04.2019 ஆம் திகதிகளிலும் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்குமிட வசதிக்காக விண்ணப்பித்த மாணவர்கள் ஆரம்ப திகதிக்கு முன்தினம் விடுதிக்கு சமூகமளிக்குமாறும் வவுனியா வளாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை வவுனியா வளாகத்தின் புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் மற்றும் கல்விச் செயற்பாடுகள் தொடர்பாக தாமதமின்றி வவுனியா வளாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்துமாறு வளாகத்தின் முதல்வர் த.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.