இலங்கை -இந்திய இராணுவத்தின் கூட்டு இராணுவ பயிற்சி ஆரம்பம்.

இலங்கை மற்றும் இந்தியா இராணுவத்தின் கூட்டு இராணுவ பயிற்சி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

‘மித்ர சக்தி’ எனும் இந்த கூட்டுப்பயிற்சி எதிர்வரும் 8ஆம் திகதி வரை தியதலாவ முகாமில் நடைபெறுமென இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

குறித்த கூட்டு இராணுவ பயிற்சியில் இரு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 120 வீரர்கள் பங்குபெறுவார்களென தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இரு நாட்டு படைவீரர்களுக்கிடையில் நெருங்கிய உறவை விரிவாக்குதல் மற்றும் இராணுவத்தின் திறனை மேலும் மேம்படுத்துவதற்காகவே இக்கூட்டுப்பயிற்சியினை மேற்கொள்வதாக இந்திய இராணுவ அதிகாரி லெப்டினன்ட் மோகித் வைஷ்ணவா தெரிவித்துள்ளார்.

இலங்கை- இந்திய நட்புறவின் அடிப்படையிலேயே குறித்த கூட்டுப்பயிற்சி நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.