யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்திலும் கல்விசாரா ஊழியர்களால் பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

கைவிரல், கண்ரேகை பதிவு இயந்திரத்தின் மூலம் வருகை மற்றும் மீள் செல்கையினை பதிவு செய்தல் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் உள்வாங்கப்பட்ட பொது நிர்வாக சுற்று நிருபங்களை பாரபட்சமாக நடைமுறைப்படுத்துவதையும், ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுக்கு நியாயமற்ற நிபந்தனைகள் விதிப்பதையும், ஊழியர்களின் வரவுப் பதிவேட்டை 01.04.2019 முதல் நீக்குதல் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்களை முன்வைத்து இன்று கிளிநொச்சியிலும் கல்விசாரா ஊழியர்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.