பாசாங்கு செய்யும் த.தே.கூட்டமைப்பு!

ஜெனிவா தீர்மானத்தின்படி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடுவோம் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகின்றார்.

அவர் அரசாங்கத்தை மிரட்டுவது போன்று தமிழ் மக்களுக்குக் காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றாரே தவிர, உண்மையிலேயே அரசாங்கத்தை மிரட்டவில்லை என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

ஏனெனில் கடந்த காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, 10 கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவளித்தது.

அந்த கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும் அப்போது கூட்டமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

எனினும் தற்போதுவரை அவ்வாறு எந்தவொரு கோரிக்கைகள் தொடர்பிலும் வெளிப்படுத்தப்படவோ, நிறைவேற்றப்படவோ இல்லை. ஆனால் இன்னமும் கூட்டமைப்பு அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.