மங்கள சமரவீர உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும்: மைத்திரியிடம் கோரிக்கை!

ஜெனிவாவில் இலங்கையை காட்டிக்கொடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைச் செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“ஜெனிவாவில் நாட்டைக் காட்டிக்கொடுத்தமைக்காக, நல்லிணக்க பொறிமுறை செயலகத்தின் செயலாளர் மனோ தித்தவல, அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை கைது செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.