ஒரே குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் சாதனை.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் கல்­விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்­சையில் 9A சித்திகளைப் பெற்றுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் சேர்ந்த ஜானக குமாரசிங்க மற்றும் அச்சலா திசாநாயக்க ஆகிய தம்பதிகளுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள்.

இவர்கள் ஆரம்பக் கல்வியை நாஹொல்லாகொட மகாவித்தியாலயத்தில் கல்வியை தொடங்கினர்.

புலமைப் பரிசில் பரீட்சையில் மூன்று பேரும் சித்தி பெற்றனர்.

இதனையடுத்து குளியாப்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் தமது கல்வியைத் தொடர்ந்தனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மூவரும், ஒன்பது ஏ திறமைச் சித்திக­ளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஈ.எம். திவ்யாஞ்சலி தெவ்மினி குமார­சிங்க, ஈ.எம். நவாஞ்சலி தெத்மினி குமார­சிங்க மற்றும் ஈ.எம். பிரியங்ஞ்ஜன பியு­மன்ன குமாரசிங்க ஆகிய சகோதர சகோத­ரிகளே இந்தச் சாதனையைப் படைத்துள்ள­னர்.