மாணவனிடம் அத்துமீறிய ஆசிரியை!

மதுரையில் ஆசிரியை ஒருவர் 16 வயது மாணவனிடம் அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் செயற்பட்டுவரும் தனியார் பள்ளியில் ஆசிரியை ஒருவர் 16 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இவ்வாறு ஆசிரியையின் தொல்லையை 4 நாட்கள் வரை பொறுத்துப் பார்த்த மாணவன், அவரின் தொல்லை அதிகரிக்கவே இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

இதனடிப்படையில், பொலிஸார் அந்த ஆசிரியையின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.