வாரியபொலயில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!

வாரியபொல – மாமுனுஓயவில் இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (சனிக்கிழமை) நேர்ந்துள்ளது. கொள்கலன் ஒன்றும் கார் ஒன்றும் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.