வடக்கில் தேசிய பாடசாலைகளை உருவாக்க திட்டம் தீட்டியவர்கள் இவர்களே!

வடக்கு மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும் சதித்திட்டத்திற்கு பின்னால் வடக்கு ஆளுநரும் விஐயகலா மகேஸ்வரனும் உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பேச்சாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“வடக்கு மாகாணப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்குவது என்பது முற்றிலும் தவறான விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

அத்தகைய செயற்பாடுகளென்பது மாகாணத்திற்கு இருக்கின்ற அதிகாரங்களை மத்திய அரசு பறிப்பதுதான் நோக்கமாகும்.

இந்தப் பெரிய சதித்திட்டத்திற்கு பின்னால் வடக்கு ஆளுநரும் விஐயகலா மகேஸ்வரனும் உள்ளனர்.

ஆனாலும் மாகாண தேசிய பாடசாலைகள் எல்லாமே ஒன்றாக சம அளவில் இருக்கின்ற நிலையிலும் தேசிய பாடசாலைகள் என்ற போர்வையில் இருக்கின்ற அதிகாரங்களைப் பறிக்கின்ற வகையில் மத்திய அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுக்க முயல்கிறது.

ஆகவே அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த கபடத்தனமான சதியில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.