இலங்கையை அச்சுறுத்தும் கடும் வெயில்! சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்!

இலங்கையின் சில பகுதிகளில் மாத்திரம் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிற்பகல் வேளையில் இந்த காலநிலையை எதிர்பார்க்க முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் கடுமையான வெப்பமான காலநிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திலும் சில இடங்களில் காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.