இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன கைது!

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மது போதையில் வாகனத்தினை செலுத்தி பொரளை கின்சி வீதியில் விபத்தினை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள திமுத் கருணாரத்னவிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படலாம் அல்லது பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.