யாழில் விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்பு மூவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – மீசாலை புத்தூர் வீதி மட்டுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.45 மணியளவில் நேர்ந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிடுகு ஏற்றியவாறு பயணித்த லேண்ட்மாஸ்டருடன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில், விசுவமடுவைச் சேர்ந்த ரஜீவன் (24 வயது) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த மூவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.