வடக்கு நோக்கி பயணித்த பேருந்துகள் விபத்து – 12 பேர் காயம்!

கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி பயணித்த இரு பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

சிலாபம் புத்தளம் வீதி பங்கதெனிய சந்தியில் இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பங்கதெனிய சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் பேருந்து பின்புறமாக மோதுண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்