தேசிய வீடமைப்பு அதிகார சபை உருவாக்கப்பட்டு 40 ஆண்டுகள் நாளை நிறைவடையும் நிலையில் மாதிரி கிராமங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இட்பெற்றது.

குறித்த 40வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிளிநொச்சி அலுவலகத்திற்காகன 40 லட்சம் பெறுமதியில் அமைக்கப்படவுள்ள விடுதிக்கும், 15 லட்சம் பெறுமதியில் அலுவலகத்தை விஸ்தீரண படுத்துவதற்காகவும் அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் குறித்த அடிக்கல் இன்று பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 மாதிரி கிராமங்களை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இதேவேளை 40 பயனாளிகளிற்கு தலா பதினைந்தாயிரம் ரூபா பெறுமதியான காசோலைகளும், சீமெந்து பைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ராஜாங்க அமைச்சர் விஜயகலா குறிப்பிடுகையில்,

40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மாதிரி கிராமங்களை அமைப்பதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை 4 வருடங்களாக இருந்த மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டம் பொருத்து வீடா? இல்லையா? என்ற இழுபறிக்கு பின்னர் தற்போது விரைவாக வழங்கி முடிப்பதற்கு நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பிரதமர் பணிப்புரை வழங்கியுள்ளார். மீள்குடியேற்ற அமைச்சும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் இணைந்து மக்களிற்கு வீட்டுத்திட்டங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை விரைவு படுத்தியுள்ளனர்.

இன்று அமைச்சாரால் பல மாதிரி கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதே மாதிரி கிராமங்களை அமைச்சர் தனது கையாலேயே திறந்து வைக்கின்றார்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களிற்கு வீட்டுத்திட்டங்களை வழங்கிவரும் அமைச்சருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.