இலங்கையில் மீண்டும் சிரட்டை யுகத்திற்கு சென்ற மக்கள்!

இலங்கை மக்கள் மீண்டும் தேங்காய் சிரட்டை யுகத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார மின்அழுத்தியை பயன்படுத்தும் எங்களுக்கு எதற்கு சிரட்டை அழுத்தி என மக்கள் அதன் பயன்பாட்டை நிறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் இலங்கையர்கள் சிரட்டை அழுத்தியை பயன்படுத்துவதற்கு ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் நீண்ட நேரம் மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதன் காரணமாக பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில் மின்சாரம் தடைப்படும் காலப்பகுதியில் சிரட்டை மூலம் அயன் செய்யும் அழுத்தியை பயன்படுத்துவதாக குறிப்பிடப்படுகிறது.