இலங்கையின் வரைபடத்தில் 3 இலட்சம் இடங்களின் பூகோள பெயர்கள் அடையாளம்!

இலங்கையின் வரைபடத்தில் உள்ள 3 இலட்சம் இடங்களின் பூகோள பெயர்கள் தற்போது அடையாளபடுத்தப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாக நில அளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வரைபடைத்தில் பயன்படுத்தப்படும் பெயர்களை உரிய முறையில் இறுதிசெய்யும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமையவே பூகோள பெயர்கள் தற்போது அடையாளபடுத்தப்பட்டு இறுதி செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

தற்போதைய வரைபடத்தில் உள்ள கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள், தொல்பொருள் முக்கியத்துவமிக்க பகுதிகள், மத வழிபாட்டுத் தளங்கள, நீர்த்தேக்கங்கள், கங்கைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் பூகோளப் பெயர்கள் தற்போது குறிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.