பாடசாலை மாணவர் அனுமதியில் முறைகேடு !

பலதரப்பட்ட முறைகேடுகள் பாடசாலை மாணவர் அனுமதியில் இடம்பெற்றுள்ளதால் இவ்விடயம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் அனுமதியில் இலஞ்ச ஊழலும் இடம்பெற்றுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது.

இலஞ்சம் பெறப்பட்டதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விபரங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமர்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டினால் சில பாடசாலைகளில் அதிபர்கள் பதிவி நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தகுதியற்ற மாணவரகளைச் சேர்த்துக் கொள்வதற்காக தகுதியான மாணவர்களுக்கு பாடசாலைகளில் அனுமதி வழங்காத சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பான உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், சில அதிபர்களுக்கு இதன் காரணமாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.