கோத்தபாயவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு?

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் எந்தவொரு வழக்கும் தாக்கல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவிலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரரான லால் விக்ரமதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக, லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர்கள் அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்க குடியுரிமையை கைவிடும் கோத்தபாய ராஜபக்சவின் நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்தும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சிங்கள ஊடகம் ஒன்று அண்மையில் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையிலேயே, குறித்த செய்திக்கு லசந்த விக்ரமதுங்கவின் சகோதரரான லால் விக்ரமதுங்க மறுப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக நாங்கள் வழக்கு எதனையும் தாக்கல் செய்யவில்லை. அவ்வாறான திட்டங்கள் எதுவும் எங்களுக்கு இல்லை.

எவ்வாறாயினும், குறித்த கொலை வழக்கு தொடர்பில் இலங்கை நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கைகளுக்காக காத்திருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.