இணையத்தில் பிரபலமாகும் ’96’ திரைப்படத்தின் மொழியாக்கம்!

நடிகர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிபெற்ற ’96’ திரைப்படத்தின் கன்னட மொழியாக்கத்தில், நடிகர் கணேஷ் மற்றும் நடிகை பாவனா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்திற்கு ’99’ என பெயரிடப்பட்டுள்ளது. பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இதற்கு இசையமைத்துள்ளார். இது அவரது 100ஆவது திரைப்படமாகும்.

தமிழில் பெரும் வரவேற்பு பெற்ற ’96’ திரைப்படத்தின் மொழியாக்கத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் கன்னட மொழியாக்க திரைப்படத்தின் வீடியோ பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.