பெருந்தொகையான போதைப்பொருட்கள் இன்று அழிப்பு!

நாட்டில் அண்மையில் பல்வேறு பகுதிகளில் கைப்பற்றப்பட்ட பெரும் தொகை போதைப் பொருட்களில் 750 கிலோ வரையிலான போதைப் பொருட்கள் இன்று முதலாம் திகதி அழிக்கப்படவுள்ளன.

இதற்கான நடவடிக்கைகளை போதைப் பொருள் தடுப்புப் பிரிவும், போதைப் பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போதைப்பொருட்கள் ஜனாதிபதி முன்னிலையிலும், ஊடகங்கள் முன்னிலையிலும் அழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.