மரங்களில் தாவி தப்பிய நபர் ஆயுதங்களுடன் கைது!

மட்டக்களப்பில் கைக்குண்டு துப்பாக்கிரவைகள், வாள்கள் உட்பட ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் நேற்றுமுன்தினம் குறித்த நபர் மறைந்திருந்த இடத்தை முற்றுகையிட்டு அவரை கைது செய்தனர்.

இதன்போது அவரிடமிருந்து ஒரு கைக்குண்டு , ரி. 56 ரக துப்பாக்கிரவைகள் 10, வாள்கள் மூன்று ,70 மில்லிக்கிராம் ஹெரோயின் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்வடர் ஐயங்கேணி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் பல்வேறு குறித்த பகுதியில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் இவருக்கு தொடர்புள்ளது எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

எல்லாளன் படைப் பிரிவு எனக் கூறி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த இவரை பொலிசார் பிடிக்கச் செல்லும் நிலையில் அவர் பொலிசாரிடமிருந்து இருந்து தப்பி காட்டூனில்வரும் மௌக்லி போன்று மரங்களில் தாவி தப்பியோடி வந்துள்ளார். என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது

இச் சம்பவத்தில் கைது செய்தவரை நேற்று மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.