நாட்டு மக்களை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ள மின்சார விநியோகத் தடை!

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின்சார விநியோகத் தடையை இந்த மாத இறுதிக்குள் முடிவுக்கு கொண்டு வர எதிர்பார்ப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் மின் விநியோகத்தில் எதுவித தடையும் இருக்காது அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடியான நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும்படி அமைச்சு நுகர்வோரை கேட்டுள்ளது.

மின்சாரத்தை பிறப்பிப்பதற்கு மேலதிக மின்பிறப்பாக்கிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அமைச்சின் பேச்சாளர் சுலக்சன ஜயவர்த்ன தெரிவித்தார்.

சமகாலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறுபோக விவசாய செயற்பாடுகளுக்கு நீர் தேக்கங்களிலிருந்து நீர், திறந்து விடப்படும் பொழுது, நீர் மின் உற்பத்தி கொள்ளளவை அதிகரிக்கலாம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.