கூட்டமைப்பை அவசரமாக சந்திக்கிறார் ரணில்!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று(திங்கட்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திகள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது கூட்டமைப்பிடம் கோரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வரவு செலவுத்திட்டத்தினை தோற்கடிக்கும் முயற்சியில் மஹிந்த அணியினர் திரைமறைவில் காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வரும் நிலையில், கூட்டமைப்பின் ஆதரவு அரசாங்கத்திற்கு தேவையாகவுள்ளது.

இந்தநிலையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பினரை ரணில் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.