மஸ்கெலியாவில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி!

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ளதோடு வீதியில் பயணித்த ஒருவர் மீது வண்டி மோதியதில் குறித்த நபர் உயிரிழந்தார்.

முச்சக்கர வண்டி வந்த வேகத்தை கண்டு பாதையில் பயணித்த குறித்த நபர் 15அடி பள்ளத்தில் விழுந்ததால் படுகாயம் அடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கிய போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கும்பல்கமுவ வலப்பனையை சேர்ந்த 59 வயதுடைய திசாநாயக்க முதியன்சலாகே ரம்பன்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதி கைதுசெய்யப்பட்டு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதாகவும் குறித்த முச்சக்கர வண்டி கேகாலை பகுதியை சேர்ந்தது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.