சட்டவிரோதமக இந்தியா செல்ல முற்பட்ட நைஜீரிய பிரஜைகள் நால்வர் உட்பட இரு இலங்கையர்கள் கைது!

சட்ட விரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கையிலிருந்து இந்தியா செல்ல முற்பட்ட நைஜீரிய பிரஜைகள் நால்வரும் , அவர்களை அழைத்துச் சென்ற இலங்கையர்கள் இருவரும் வடக்கு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற் பகுதியில் நேற்றயதினம் வடமத்திய கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது, தலைமன்னார் கடலின் 12 கடல் மையில் தொலைவில் சந்தேகத்தந்கிடமாக படகொன்று செல்வதை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.

இதன் போது விரைந்து செயற்பட்ட கடற்படையினர் குறித்த படகை சுற்றிவளைத்து சோதனைக்குட்படுத்திய போது நைஜீரியா பிரஜைகள் நால்வரும் , இலங்கையவர்கள் இருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 26 , 27 , 32 , 42 ஆகிய வயதுகளையுடைய நைஜீரிய பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டள்ளதுடன் , மன்னார் மற்றும் பேசாளை பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 23 வயதுகளையுடைய இளைஞர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.