“மாகாணசபை தேர்தலை நடத்த நீதிமன்றத்தின்”

மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணைக்குழு ஆரம்பத்திலே இணக்கம் தெரிவித்துள்ளது. தேர்தல் திருத்த முறையில் காணப்படுகின்ற சட்ட சிக்கலை சீர் செய்து தேர்தலை விரைவாக நடத்த நீதிமன்றம் வழங்கும் தீர்வினை தான் எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அத்துடன் மாகாண சபை தேர்தலை நடத்தாமல் தனிமனித அடிப்படை உரிமை மீறல் இடம் பெற்றுள்ளது என்று குற்றஞ்சாட்டி தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதிராக இரண்டு மனுத்தாக்கல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாக்கல்கள் முழுமையாக அடிப்படை உரிமை மீறலினை மையப்படுத்தியமாக காணப்படுகின்றது.

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணைக்குழு தயாராகவே உள்ளது சட்ட சிக்கல்களுடன் தேர்தலை நடத்துவதால் மாறுப்பட்ட விளைவுகள் ஏற்படும். ஆகவே நீதிமன்றமே அடிப்படை உரிமையினை பாதுகாக்க ஒரு வழிமுறையினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.