மின் உற்பத்தி நிலையங்களுக்காக 3,500 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தகவல்!

நாடளாவிய ரீதியில், சிறியளவிலான மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக 3,500 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், 75 மின் உற்பத்தி நிலையங்களையே அமைக்க முடியும் எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த மின் உற்பத்தி நிலையங்களை ஆறுகள், நதிகள் என்பவற்றின் நீரைப் பயன்படுத்தி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா ஆகிய பகுதிகளிலுள்ள, தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து, குறிப்பிடத்தக்களவு மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுவதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரை, சிறியளவிலான மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை.

எனினும், பரிந்துரைக்களுக்கு அமைய சிறியளவிலான மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது.