சித்திரவதைகளை தடுப்பதற்காக ஐ.நா.வின் உபகுழு இலங்கைக்கு வருகை!

இலங்கை மக்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உபகுழு, இலங்கைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்யவுள்ளது.

குறித்த குழு எதிர்வரும் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து, பொதுமக்கள், இவ்விடயங்களுடன் தொடர்புடைய அதிகாரிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது.

மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு, இலங்கை உறுதியளித்தப்படி சித்திரவதை தடுப்புக்கான சுதந்திர தேசிய பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராயப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு அரசு முன்னெடுத்துள்ள திட்டங்கள் பற்றியும் கவனத்தில் கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது