பிரபாகரனுக்கு ராஜிவ் காந்தி வழங்கிய குண்டு துளைக்காத அங்கி!

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு, இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தமது குண்டு துளைக்காத அங்கியை வழங்கினார் என அதிமுகவின் பண்ருட்டி எஸ். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 5 கோடி ரூபாய் நிதி வழங்குவதற்கு முதற்கட்டமாக 50 லட்சம் ரூபாவையும் டில்லியில் வைத்து வழங்கி இருந்தார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“தனி தமிழீழம் அமைய வேண்டும் என்பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதியாக இருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைமைகள் இந்திய இலங்கை உடன்படிக்கையை எதிர்க்கவில்லை என்றாலும், அவர்கள் அதனை ஆதரிக்கவில்லை.

இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை அவர்கள் சந்தித்துப் பேசினார்கள்.

இதன் போது ராஜிவ் காந்தி பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தார்” என அவர் மேலும் கூறியுள்ளார்.