பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடும் எச்சரிக்கை!

பாராளுமன்றத்தின் கண்ணியம் மற்றும் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான வார்த்தைகளை சபையினுள் பயன்படுத்த வேண்டாம் என சபாநாயகர் கருஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடுமையாக எச்சரித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான வேளையே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹான் சில்வாவிற்கும் இடையே நேற்றைய தினம் ஏற்பட்டிருந்தது.

அவர்களுக்கிடையே நடந்த கடுமையான கருத்து பரிமாறல்களை சுட்டிக்காட்டியே சபாநாயகர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.